ஒரு ருத்ராட்சத்தில் இவ்வளவு மருத்துவ குணமா? வாங்கி போட்டால் இவ்வளவு நன்மைகளா!
பெரும்பாலான இந்துக்கள் தங்களது கழுத்தில் ருத்ராஷத்தை அணிந்து இருப்பார்கள்.
ருத்ராட்சம்
சிவபக்தர்கள் அனைவருமே தங்களது உடலில் ருத்ராட்சம் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். கடவுளின் பக்தி காரணமாக இது அணிவது அப்பக்தர்களுக்கு பழக்கமாக உள்ளது. ருத்திரன் என்பது சிவபெருமானையும், அட்சம் என்பது கண்களையும் குறிக்கிறது.
சிவனின் முக்கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே 'ருத்திராட்சம்' என்றும் கூறப்படுகிறது. பக்தியின் அடையலாம் இது என்ற போதிலும், ஆயுர்வேதத்தின் அடிப்படையில் மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதப்படுகிறது.
மருத்துவ பயன்கள்
இந்து மதத்தின் பிராத்தனை ஜெபமாலையான ருத்திராட்சம் மன ஆரோக்கியத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதய நோய்களையும் நீக்கும் என நம்பப்படுகிறது. இந்த ருத்ராட்ச கொட்டை என்பது தனியாக பல மருத்துவ குணங்களை கொண்டதாகும்.
இவற்றை தினமும் ஒரு வேளை பாலில் கொதிக்க வைத்து எடுத்து கொண்டால் உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது.
மேலும், இரவில் ருத்ராட்சத்தை ரோஸ் வாட்டரில் ஊறவைத்து, அந்நீரை கண்களுக்கு சொட்டு மருந்தாகப் பயன்படுத்தும் போது, கண் தொற்றுகளை நீங்கும். செம்பு பாத்திர தண்ணீரில் ருத்ராட்சத்தை ஊறவைத்து அந்த நீரை பருகினால் நீரிழிவு நோயின் மெல்ல மெல்ல குறையும்.