இனி பிரபலங்களின் துக்க வீடுகளில் வீடியோ எடுக்க அனுமதி இல்லை - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

Tamil Cinema
By Sumathi Sep 22, 2023 03:51 AM GMT
Report

பிரபலங்களின் துக்க நிகழ்ச்சியில் மீடியாக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துக்க நிகழ்ச்சி

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து பலரும் இணையம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இது மிகப்பெரிய இடையூறாக இருந்து வருகிறது.

இனி பிரபலங்களின் துக்க வீடுகளில் வீடியோ எடுக்க அனுமதி இல்லை - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி! | Media Not Allowed In Cinema Celebrities Death

இந்நிலையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?? அவர்களின் துக்கம் கேலிச் சித்திரமா? நேற்றும்..

அனுமதி இல்லை

இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும் அடையாளங்கண்டு களைய வேண்டிய நேரம் இது. குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினரின் இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன.

இனி பிரபலங்களின் துக்க வீடுகளில் வீடியோ எடுக்க அனுமதி இல்லை - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி! | Media Not Allowed In Cinema Celebrities Death

இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால்... காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள்... மற்றும் சினிமா சார்ந்த அனைவரின் முக்கிய கடமையாகும். அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரீகங்கள் தடுக்கப்படும். ஒரு மூத்த கலைஞனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.