நள்ளிரவு போதை பார்ட்டியில் சிக்கிய முக்கிய திரையுலக, அரசியல் பிரபலங்களின் வாரிசுகள்
நள்ளிரவு போதை பார்ட்டியில் நடிகைகள், பாடகர், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களின் வாரிசுகள் 38 பேர் உள்பட 148 பேர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போதை விருந்து நடந்துள்ளது.
மாநிலத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே இது போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் நள்ளிரவை கடந்து போதை பார்ட்டி நடந்ததால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தியதில் நாற்பத்தி எட்டு இளம் பெண்கள் உட்பட 148 பேர் அந்த போதை பார்ட்டியில் பங்கேற்றது தெரியவந்துள்ளது.
பரிசோதனையில் கொகைன், பிரவுன் சுகர் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து 148 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பார்ட்டிக்கு வந்தவர்களுக்கு பிரவுன் சுகர், கொகைன் போன்ற போதை பொருட்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.
மேலும், இந்த போதை பார்ட்டியில் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள், திரைப்பட நிஹாரிகா கோனிடேலா, பாடகர் ராகுல், முன்னாள் காங்கிரஸ் கட்சி அமைச்சர் ரேணுகா சௌத்ரி மகள் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் டிஜிபி கௌதம் சவாங்கின் மகள்,
தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ககல்லா ஜெயதேவின் மகன் உள்ளிட்டோர் பங்கேற்றது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக இந்த 148 பேரில் 38 பேர் விஐபிக்களின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் பிடியில் சிக்கியிருக்கும் விஜபி வாரிசுகளை போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று போலீஸ் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு அழுத்தம் தரப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.