பிரபல ஊடக நிறுவன அதிபர் 93 வயதில் 5-வது திருமணம் - குவியும் வாழ்த்துகள்!

United States of America Marriage Viral Photos
By Sumathi Jun 03, 2024 05:52 AM GMT
Report

ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக் 5வது திருமணம் செய்துள்ளார்.

ரூபர்ட் முர்டோக்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 92 வயதான புகழ்பெற்ற ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக். அவரது காதலியான 67 வயதான எலெனா ஜோகோவாவை அவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

rupert murdoch

கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. ரூபர்ட் முர்டோக்குக்கு 1956-ல் முதல் திருமணம் நடைபெற்றது.

92 வயதில் 5வது திருமணம் - நிச்சயதார்த்தம் நின்றதால் ஆழ்ந்த சோகத்தில் முதியவர்!

92 வயதில் 5வது திருமணம் - நிச்சயதார்த்தம் நின்றதால் ஆழ்ந்த சோகத்தில் முதியவர்!

5வது திருமணம் 

அதன் பிறகு 1967, 1999 மற்றும் 2016-ல் அடுத்தடுத்த திருமணங்களை செய்து கொண்டார். அனைத்தும் விவாகரத்தில் தான் முடிந்துள்ளது. இவருக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். தற்போது திருமணம் செய்துள்ள எலெனா, ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்.

பிரபல ஊடக நிறுவன அதிபர் 93 வயதில் 5-வது திருமணம் - குவியும் வாழ்த்துகள்! | Media Magnate Rupert Murdoch Marries 5Th Time

அமெரிக்க நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். உயிரியல் துறை வல்லுநராக உள்ளார். ரஷ்ய நாட்டு அரசியலில் ஈடுபட்டு வரும் அலெக்சாண்டரின் முன்னாள் மனைவி.

இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ரூபர்ட் முர்டோக் மொத்த சொத்து மதிப்பு சுமார் 19.9 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.