92 வயதில் காதலியை மணக்கும் அதிபர் - கல்யாணத்திற்கு பின் இந்த நாடுகளில் தான் பயணமாம்.!
புகழ்பெற்ற ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக் 5வது முறையாக திருமணம் செய்துகொள்கிறார்.
ரூபர்ட் முர்டோக்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 92 வயதான புகழ்பெற்ற ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக். அவரின் வால்ஸ்டீரிட்ஜர்னல், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முர்டோக் 5வது முறையாக திருமணம் செய்துகொள்கிறார்.
அவரது காதலியான ஆன் லெஸ்லி ஸ்மித்தை கடந்தாண்டு அவரது திராட்சை தோட்டத்தில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த கலிபோர்னியாவில் சந்தித்துள்ளார். ஆன் லெஸ்லிக்கு வயது 66, இவர் சேன் பிரான்சிஸ்கோவில் முன்னாள் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர்.
5வது திருமணம்
அமெரிக்க பாடகர் மற்றும் ஊடக நிர்வாகி செஸ்டர் ஸ்மித்தின் முன்னாள் மனைவி. இது எனது முதல் பாதி வழ்க்கை கிடயாது. 70 வயதை நெருங்கிக்கொண்டிருக்கின்றேன். அது வாழ்வின் கடசி பாகம். நான் சரியான நேரத்திற்காக காத்திருந்தேன். எனது நண்பர்கள் எனது இந்த முடிவுக்கு மகிழ்ச்சி தெரிவித்தார்கள் என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இவர்களது திருமணம் கோடை காலத்தில் நடைபெறும். இந்த தம்பதிகள் தங்கள் நேரத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளில் செலவிட திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், முர்டோக் தனது 4வது மனைவியும், மாடலுமான ஜெரி ஹாலை கடந்தாண்டு விவாகரத்து செய்தார். அவருடன் தனது 6 ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.