குமுறும் 90s கிட்ஸ்..67 வயதில் 5வது திருமணம் - 10 குழந்தைகள், 40 பேரக்குழந்தைகள்!
67 வயதான தந்தைக்கு, மகள்கள் 5வது திருமணத்தை செய்து வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
5வது திருமணம்
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் சவுகத்(67). இவர் 4 திருமணங்களைச் செய்திருந்தார். அதன் மூலம் அவருக்கு பத்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும், 40 பேரக்குழந்தைகள் மற்றும் 11 மருமகள்கள் உள்ளனர்.
இந்த குடும்பத்தில் மொத்தம் 62 பேர் உள்ளனர். சௌகாத்தின் 5ஆவது திருமணத்திற்கு முன்பு, அவரின் எட்டு மகள்களுக்கும், 1 மகனுக்கும் திருமணமாகியிருந்தது. மேலும், தான் தனியாக கூடாது என்பதற்காக
சந்தோஷம் தான்
தனது இரண்டு மகள்களும் 5ஆவது மற்றும் கடைசி முறையாக திருமணம் செய்துகொள்ளும்படி கூறியதாக சௌகாத் கூறியுள்ளார். அதன்படி அவருக்கு 5வது திருமணம் விமர்சையாக நடைபெற்றது.
இந்த திருமணம் குறித்து அவரது 5வது மனைவி கூறுகையில், "எனக்கு உண்மையில் சந்தோஷமாகத் தான் உள்ளது. மற்ற பெண்களுக்குப் போல இல்லாமல், எனக்குத் திருமணத்தின் போதே பெரிய குடும்பம் கிடைத்துள்ளது. அதில் எனக்குச் சந்தோஷம் தான்" என்றார்.