Breaking news : கால் இடறி கீழே விழுந்த வைகோ? திடீரென அறுவை சிகிச்சை ஏற்பாடு!!

Vaiko Tamil nadu
By Karthick May 26, 2024 11:30 AM GMT
Report

தமிழக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான வைகோவிற்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளரான துரை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதவில்,

MDMK vaiko hospitalised

இயக்கத் தந்தை தலைவர்

வைகோ அவர்கள்

நலம் பெறுவார்.

விரக்தியில் பாஜகவினர் சாதி மத அரசியலை பேசுகிறார்கள் - துரை வைகோ விமர்சனம்

விரக்தியில் பாஜகவினர் சாதி மத அரசியலை பேசுகிறார்கள் - துரை வைகோ விமர்சனம்

மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள்.

எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.


மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்; வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.