வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - என்ன காரணம்?

Marumalarchi Dravida Munnetra Kazhagam Vaiko Chennai
By Karthikraja Nov 14, 2024 10:30 AM GMT
Report

வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து துரை வைகோ விளக்கமளித்துள்ளார்.

வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த மே மாதம் கட்சியினரின் இல்ல விழாவிற்காக திருநெல்வேலி சென்ற போது அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தார். 

vaiko

அப்போது திடீரென கால் இடறி கீழே விழுந்ததில் வைகோவின் தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. 

தமிழ்நாட்டில் உள்ளதை போன்று மோசமாக எங்கும் இல்லை - வைகோ ஆவேசம்

தமிழ்நாட்டில் உள்ளதை போன்று மோசமாக எங்கும் இல்லை - வைகோ ஆவேசம்

துரை வைகோ விளக்கம்

இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோவிற்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து பிளேட் வைக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு சில நாட்கள் கழித்து வீடு திரும்பினார். 

vaiko in hospital

இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார். வைகோவின் உடல்நிலை என்ன ஆனது என மதிமுக தொண்டர்கள் கவலையடைந்தனர். 

ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்றுவதற்காகவே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைகோவின் மகன் துரை வைகோ விளக்கமளித்துள்ளார்.