சபரிமலை செல்லும் பக்தர்களே.. பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு விடுக்கபட்ட எச்சரிக்கை - திடீர் அறிவிப்பு!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகில் நிலை நிலை கொண்டிருந்தது.
மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கேரளாவில் வருகிற 4 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் யாரும் லட்சத்தீவு கடல்பகுதிக்கு செல்ல வேண்டாம்.
ஆரஞ்சு அலர்ட்
மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாலக்காடு, எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், மலப்புரம், கன்னூர் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். வருகிற 4 ந் தேதி வரை கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையின் போது நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.