சீஸ்க்கு பதிலா இப்படியா; அதிர்ந்த வாடிக்கையாளர்கள் - பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து!
தரமற்ற உணவினால் பிரபல உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தரமில்லா உணவு?
துரித உணவகங்களில் மிகவும் பிரபலமான மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் பகுதியில் அந்நிறுவனத்தின் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது.
இங்கு கிடைக்கும் உணவில் அவர்கள் பயன்படுத்தும் சீஸின் சுவை மற்றும் தரம் குறைவாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை எழுப்பி இருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த நிறுவணம் மலிவு விலை வெஜிடபிள் எண்ணெயை சீஸ்க்கு பதிலாக பயன்படுத்தியது தெரியவந்தது.
தீவிர விசாரணை:
இந்நிலையில், பெரும்பாலான நேரம் சீஸ் என்று பெயரிடப்பட்ட பொருட்களுக்கு மாறாக இந்த மலிவு விலை வெஜிடபள் எண்ணையை மட்டுமே உபயோகித்துள்ளனர்.
இதனால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மெக் டொனால்ட்ஸின் உரிமத்தை ரத்து செய்து அந்த நிறுவனத்தின் மற்ற கிளைகளிலும் தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவத்துறையான எஃப்டிஏவிற்கு மெக் டொனால்ட்ஸ் கடிதம் அனுப்பியது. அதில், தாங்கள் விற்பனை செய்து வரும் சீஸ் என்ற பெயரிடப்பட்ட சில உணவு வகைகளின் பெயரை மாற்றுவதாக தெரிவித்திருந்தது.
மேலும், அது குறித்து எந்த முடிவுகளும் வராமல் இருந்த நிலையில் தற்போது மெக் டொனால்ட்ஸ் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.