இனி குரங்கு அம்மை இல்லை.. எம் பாக்ஸ் - WHO திடீர் அறிவிப்பு!

World Health Organization Monkeypox ‎Monkeypox virus
By Sumathi Nov 29, 2022 06:57 AM GMT
Report

குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது.

குரங்கு அம்மை

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் 1958ல் இந்த நோய் குறித்து ஆராய்ச்சி நடத்தி குரங்கு அம்மை என்ற பெயர் சூட்டப்பட்டது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், குரங்கு அம்மை என்ற பெயர் ஆப்ரிக்க கண்டத்தை இனரீதியில் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

இனி குரங்கு அம்மை இல்லை.. எம் பாக்ஸ் - WHO திடீர் அறிவிப்பு! | Mbox As A New Name For Monkeypox Who

இந்த நோய் ஆப்ரிக்க நாடுகளில் இருந்துதான் பரவுவதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்பதே உண்மை. எனவே குரங்கு அம்மை என்ற பெயருக்கு பதிலாக இந்த தொற்று நோய்க்கு வேறு பெயர் சூட்ட வேண்டும் என உலகில் பல நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன.

எம் பாக்ஸ்

இதன் அடிப்படையில் பல்வேறு விஞ்ஞானிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து குரங்கு அம்மை நோய் இனி 'எம் பாக்ஸ்' என அழைக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குரங்கு அம்மை மற்றும் எம் பாக்ஸ் பெயர்கள் இரண்டும் பயன்படுத்தப்படும்.

அதன்பின் எம் பாக்ஸ் என்ற பெயர் மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.