MBA படிப்பை நிறுத்திட்டு டீ கடை வச்ச இளைஞர் - இப்ப ரூ. 91 லட்சத்துல சொகுசு கார்.!

Gujarat India Viral Photos
By Sumathi Feb 17, 2023 08:37 AM GMT
Report

படிப்பை நிறுத்திவிட்டு டீ கடை வைத்த இளைஞர் லட்சங்களில் சொகுசு கார் வாங்கியுள்ளார்.

 டீ கடை

பட்டதாரியான பிரபுல் பில்லோர் என்பவர் மேலாண்மை படிப்புக்காக நுழைவுத் தேர்வை எழுதியிருக்கிறார். ஆனால், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் டீ கடை வைக்க முடிவு செய்துள்ளார். அதன்பின் 'MBA Chaiwala' எனும் பெயரில் டீக்கடையும் துவங்கி நடத்தி வந்துள்ளார்.

MBA படிப்பை நிறுத்திட்டு டீ கடை வச்ச இளைஞர் - இப்ப ரூ. 91 லட்சத்துல சொகுசு கார்.! | Mba Drop A Man Tea Shop Buys Mercedes Goes Viral

அகமதாபாத்தில் சிறிய கடையில் துவங்கிய இவருக்கு தினசரி 8000 ரூபாயாக இருந்த இவருடைய வருமானம் தற்போது ரூ. 30 கோடிக்கும் மேலாக உயிர்ந்துள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் இவருக்கு 200 கிளைகள் உள்ளன.

சொகுசு கார் 

மேலும், இந்திய அளவில் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவன தலைவராகவும் இருக்கிறார். தொடர்ந்து பல முதலீடுகளையும், புதுப்புது பிசினஸ் ஐடியாக்களையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், Mercedes-Benz GLE luxury SUV காரை வாங்கியிருக்கிறார்.

இதன் விலை 91 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.