கடனை திருப்பி கேட்ட நபர்.. சுவற்றில் சிறுநீரை ஊற்றி அட்டூழியம் செய்த மேயரின் குடும்பம்!
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் மேயரின் குடும்பம் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேயர்
கோவையில் மணியக்காரம்பாளையத்தில் உள்ள நட்சத்திரா கார்டனில் வசித்து வருபவர் சரண்யா. இவருக்கு வயது இவரது கணவர் கோபிநாத். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திமுகவை சேர்ந்த இவருக்கு 33 வயது, இவர்கள் 10 ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு வீடுகளை கொண்ட வீட்டில் இரண்டரை ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த வீட்டின் முன்புறத்தில் கோபிநாத் குடும்பம் வசித்து வருகிறது. பின் வீட்டில் கோவை மேயர் கல்பனா, தாய் காளியம்மாள், மற்றும் மேயரின் தம்பி குமார் வசித்து வருகின்றனர்.
மேயர் கல்பனா பதவிக்கு வருவதற்கு முன்பு அவரது தாயார் உடல்நல குறைவாக இருந்தபொழுது இவரது தம்பியான குமார், பக்கத்துக்கு வீட்டுக்காரரான கோபிநாத்திடம் 15000 கடன் வாங்கியுள்ளார். அதில் ரூ.5000 பணத்தை கொடுத்துவிட்டனர், மிச்ச பணத்தை கொடுப்பதற்கு முன்னர் அவர் மேயராகிவிட்டார்.
மேயர் குடும்பம் செய்த செயல்
இந்நிலையில், கோபிநாத் தான் கொடுத்ததில் மிச்ச பணமான ரூ.10,000 திருப்பி கேட்டுள்ளார். அப்பொழுது அதனை வாங்கிய மேயரின் தம்பி குமார் திட்டி அனுப்பியுள்ளார். எல்லோருக்கும் பொதுவாக இருந்த இரண்டு கேட்டுகளை பூட்டி வைத்துள்ளார்.
இதனால் ஒரு மாதத்திற்கும் மேலாக கோபிநாத் அவரது காரை எடுக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன் மேயர் கல்பனாவும் இங்கு குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அதன்பிறகு, கடன் கொடுத்த கோபிநாத் வீட்டின் சமையலறையின் பின்புறத்தில் கெட்டுப்போன சாப்பாடு வெட்டப்பட்ட கோழிக்கழிவு போன்றவற்றை கொட்டி உள்ளனர்.
மேலும் வாளியில் சிறுநீர் பிடித்து அதையும் கோபிநாத் வீட்டில் சமையலறை சுவற்றில் மீது குமார் கொட்டியுள்ளார். இது அங்கு இருந்து சிசிடிவியில் பதிவாகியிருந்தது, அதனை எடுத்து ஆதாரத்துடன் மேயரின் குடும்பத்தின் மீது போலீசில் புகாரளித்துள்ளார் கோபிநாத்.