கொடுத்த கடனை திருப்பி கேட்டது ஒரு குத்தமா? இறந்தது போல் நாடகம் - தேடுதல் வேட்டையில் போலீசார்
இந்தோனேஷியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக தனது மரணத்தை போலியாகச் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம்ப வைத்து கடன் வாங்கிய பெண்
இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி எனும் நகரில் வசித்து வருபவர் மாயா குணவான். இவர் தான் வசிக்கும் பகுதிகளில் பெண்களிடம் சீட்டு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார்.
இதற்கிடையில், கடந்த (2021) ஆம் ஆண்டு முகநூல் வழியாக அதே மாநிலத்தை சேர்ந்த லீஸா தேவி என்ற பெண் அவருக்கு பழக்கம் ஆனார்.
இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டதை தொடர்ந்து குணவானிடம் லீஸா தேவி ரூ.2 லட்சத்தை கடனாக கேட்டுள்ளார். தோழியாக பழகி விட்டதால் உடனடியாக குணவாவும் கடனாக பணத்தை கொடுத்து உதவி செய்துள்ள்ளார்.
கடனாக பெற்ற இந்த பணத்தை லீஸா கடந்த நவம்பர் 20-ஆம் தேதி கொடுப்பதாக மாயாவிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து, கடந்த நவம்பர் 20-ம் மாயா அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது லீஸா டிசம்பர் 6-ம் தேதி பணம் கட்டாயம் தந்துவிடுகிறேன் என இழுத்தடுத்துள்ளார். அதற்கு குணவானும் ஒப்புக்கொண்டு கடந்த 6-ஆம் தேதி லீஸாவை குணவான் தொடர்புகொண்ட போது, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வந்துள்ளது.
நாடகமாடிய பெண் தலைமறைவு
இதனால் சற்று அதிர்ச்சியான குணவான், லீஸாவின் பேஸ்புக்குக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, லீஸாவின் ஃபேஸ்புக்கில் அவர் இறந்து கிடப்பதை போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டு எனது தாயார் லீஸா கார் விபத்தில் இறந்துவிட்டார்” என அவரது மகள் பதிவிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தை குணவான் ஜூம் செய்து பார்த்த போது, அது மாயாவின் முகத்துடன் ஒத்துப்போகவில்லை. பின்னர் அந்த புகைப்படத்தை மட்டும் காப்பி செய்து கூகுளில் போட்டு பார்த்துள்ளார்.
இது பற்றி சந்தேகமடைந்த குணவான் லீசா தேவாவின் முகம் இல்லாத படங்கள் போலியானவை மற்றும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்று கண்டுபிடித்தார்.
இதனால் கடும் கோபமான குணவான் லீஸாவின் இந்த மோசடி குறித்து போலீஸில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லீஸா உயிருடன் இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் தலைமறைவானதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.