குத்துவிளக்கு ஏற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சை... தவெக எம்.எல்.ஏ-வை மேயர் பிரியா என்ன செய்தார்?
சென்னை பள்ளி திறப்பு விழாவில் தவெக எம்.எல்.ஏ-வை மேயர் பிரியா நடத்திய விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தவெக வெற்றிபெற்று அட்சியமைத்து வரும் நிலையில், தவெக அமைச்சர்களை தங்களது பணியை செய்யவிடாமல் ஏற்கனவே இருந்த கட்சிகள் தடுத்து வருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்நிலையில் சென்னை புளியந்தோப்பில் பள்ளி கட்டிளம் திறப்பு விழாவின் போது, மேயர் பிரியா, தவெக எம்.எல்.ஏ-வை நடத்திய விதம் இணையத்தில் காணொளியாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திறப்புவிழாவில் நடந்தது என்ன?
சென்னை புளியந்தோப்பு பகுதியில் பள்ளி ஒன்றில் புதிய கட்டிடம் ஒன்று திறக்கப்பட்ட நிலையில், இதற்கு மேயர் பிரியா, தவெக எம்.எல்.ஏ பல்லவி மற்றும் சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பல்லவியை பின்னுக்கு நிறுத்தி அனைத்து செயலையும் மேயர் பிரியா செய்ததுடன், ஒரு கட்டத்தில் குத்துவிளக்கு ஏற்றுவதற்கு பல்லவியிடம் கொடுக்காமல் அருகில் இருந்த இணைய ஆணையரிடம் கொடுத்துள்ளார்.
இந்த காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலரும் மேயர் பிரியாவை விமர்சித்து வருகின்றனர்.

தவெக எம்.எல்.ஏ கூறியது என்ன?
தவெக எம்.எல்.ஏ பல்லவி கூறுகையில், இதுகுறித்து குறித்து கூறுகையில், இதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. விட்டுக் கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை என்று கூறியதுடன், தளபதியே அனைவரையும் அமைதியாக கையாள்கின்றார்.
அவரது வழியிலேயே நாங்களும் செல்வோம். மக்களுக்கு நல்லது செய்வது தான் முக்கிய கடமையாகும். கடந்த ஆட்சியில் அனைத்து செய்துவிட்டதாக கூறி மக்களை ஏமாற்றி வருவதுடன், தற்போதும் அந்த இடத்தினை விட்டுக் கொடுக்க முடியாமல், ஆணவத்தில் பலரும் காணப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.