கடித விவகாரம்: இளம் மேயருக்கு நெருக்கடி- பரபரப்பு!
மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது எழுந்த புகாரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இளம் வயது மேயர்
கேரளா, திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன். இவர்தான் இந்தியாவில் மிகவும் வயது குறைந்த மேயர் எனப் பெயர் பெற்றவர். இந்த மாநகராட்சியின் கீழ் 295 தற்காலிக பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக,
மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்டு கட்சியை சேர்ந்தவர்களின் பட்டியலை தருமாறு கேட்டு இஅவ்ர மாவட்ட செயலாளார் ஆனாவூர் நாகப்பனுக்கு எழுதியதாக கடிதம் ஒன்று வெளியானது. இந்தக் கடிதம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேயர் ஆர்யா ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
சர்ச்சை கடிதம்
ஆனால் இதனை மேயர் ஆர்யா ராஜேந்திரன் மறுத்துள்ளார். இந்நிலையில், மேயர் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து இது தொடர்பாக விசாரணை நடத்தக் கடிதம் அளித்துள்ளார். அதனையடுத்து, தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"நான் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இதுபோன்ற கடிதங்கள் அனுப்பிய பழக்கமில்லை. உண்மையில் அதில் என்ன எழுதியிருந்தது என்று எனக்குத் தெரியாது. அதன் திரிக்கப்பட்ட கடிதத்தை நான் பார்த்தேன்.
என் அலுவலகத்தில் யாரையும் சந்தேகிக்க முடியவில்லை. அதனால் முறையான விசாரணை வேண்டும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து இந்தக் கடிதம் தொடர்பான உண்மையை அறிய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு டிஜிபி அனில்குமார் உத்தரவிட்டுள்ளார்.