திடீர் நெஞ்சுவலி; சிகிச்சை முடிந்த உடனே பணிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் - நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil nadu Mayiladuthurai
By Swetha Jul 02, 2024 05:36 AM GMT
Report

ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பிய நாளன்றே மாவட்ட ஆட்சியர் பணியாற்றி வருகிறார்.

மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு அம்மாவட்டத்தின் 3வது ஆட்சியராக ஏ.பி.மகாபாரதி பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். அந்த மாவட்டத்திற்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் மகாபாரதி சிறப்பாக செய்துவருகிறார்.

திடீர் நெஞ்சுவலி; சிகிச்சை முடிந்த உடனே பணிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் - நெகிழ்ச்சி சம்பவம்! | Mayiladuthurai Collector Went Work After Operation

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார். பின்னர் அன்று மதியம் முகாம் அலுவலகத்துக்கு சென்ற அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் தஞ்சாவூர் மற்றும் சென்னையில் சிகிச்சை பெற்று வந்துகொண்டு இருந்தார். அப்போது அவருக்கு ஜூன் 27-ம் தேதி இதயக் குழாயில் ஏற்பட்டிருந்த 3 அடைப்புகளின் காரணமாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது.

பாதுகாவலர் இல்லாமல் நடந்தே சென்ற மாவட்ட ஆட்சியர் - இரவில் பரபரப்பு!

பாதுகாவலர் இல்லாமல் நடந்தே சென்ற மாவட்ட ஆட்சியர் - இரவில் பரபரப்பு!

நெகிழ்ச்சி சம்பவம்

இதையடுத்து, சிகிச்சை முடிந்து நேற்று காலை மயிலாடுதுறை திரும்பிய மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சற்றும் ஓய்வெடுக்காமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தது மனுக்களை பெற்றார்.

திடீர் நெஞ்சுவலி; சிகிச்சை முடிந்த உடனே பணிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் - நெகிழ்ச்சி சம்பவம்! | Mayiladuthurai Collector Went Work After Operation

இதை தொடர்ந்து, அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, “உங்கள் பிரார்த்தனைதான் என்னைக் காப்பாற்றியது. நான் இப்போது நலமாக உள்ளேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறினார். சிகிச்சை முடிந்து ஊர் திரும்பிய நாளன்றே ஓய்வெடுக்காமல் மாவட்ட ஆட்சியர் பணியில் சேர்ந்து பணியாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.