பாதுகாவலர் இல்லாமல் நடந்தே சென்ற மாவட்ட ஆட்சியர் - இரவில் பரபரப்பு!
மாவட்ட ஆட்சியர்
சேலம் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் பிருந்தா தேவி. இவர் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல புறப்பட்டார். அப்போது தனது கார் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து வெளியே நடக்க ஆரம்பித்தார்.

உடனே அவரது கார் மெயின் கேட் அருகே வந்து நின்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் "நீங்க ஏம்பா வந்தீங்க நான் நடந்தே போய்கிறேன்’ என்று கூறிவிட்டு வள்ளுவர் சிலை வரை நடக்கத் தொடங்கினார்.
விளக்கம்
அவரது காரில் டீசல் இல்லாததால், அதனை நிரப்புவதற்காக கார் ஓட்டுநர், குமாஸ்தா, முதன்மை பாதுகாவலர் ஆகியோர் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வள்ளுவர் சிலையிலிருந்து சுகனேஸ்வரர் கோயில் வரையிலும் மாவட்ட ஆட்சியர் நடந்து சென்று கோயிலுக்குள் தரிசனத்திற்கு சென்றார்.

பின்னர் மீண்டும் தனது காரில் ஏரிச் சென்றார். இதுதொடர்பாக பேசிய அவர் "எப்போதும் நடந்து தான் கோயிலுக்கு செல்வேன். இறங்கி வந்தபோது கார் இல்லை. அதனால் நான் காரை எதிர்பார்க்கவில்லை. நடந்தே செல்ல முடிவு செய்து நடக்க ஆரம்பித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
யாழில் பயங்கரம் : பாடசாலையிலிருந்து மகளை ஏற்றிச் சென்ற தந்தை தொடருந்து மோதி பலி : மகள் படுகாயம் IBC Tamil
ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து IBC Tamil