கேட்ச் பிடிக்க வந்த மார்க் வுட்...கையை வைத்து தடுத்த ஆஸ்திரேலியா வீரர் - என்ன நடந்தது?

Cricket Viral Video Matthew Wade
By Sumathi Oct 10, 2022 10:36 AM GMT
Report

மேத்யூ வேட், தான் அவுட் ஆகாமல் இருக்க பந்தை பிடிக்க வந்த பவுளர் மார்க் வுட்டை தடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 டி20 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில், 209 என்ற இலக்கை சேஸ் செய்தது ஆஸ்திரேலியா. அப்போது மார்க் வுட் வீசிய 17ஆவது ஓவரில், மேத்யூ வேட் புல் ஷாட் அடிக்க அந்த பந்து பேட்ஸ்மேன் தலைக்கு மேலே பறந்தது.

கேட்ச் பிடிக்க வந்த மார்க் வுட்...கையை வைத்து தடுத்த ஆஸ்திரேலியா வீரர் - என்ன நடந்தது? | Matthew Wade Stops Mark Wood From Taking Catch

அந்த பந்தை பிடிக்க பவுலர் மார்க் வுட், பேட்ஸ்மேனிடம் ஓடி வந்தார். ஆனால் மேத்யூ வேட், பந்தை பிடிப்பதை தடுக்கும் வகையில் தனது கையை வைத்து மார்க் வுட்-யை தடுத்தார். இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுவெல்லாம் சகஜம்

ஆனால் இதற்கு நடுவர் அவுட் வழங்கவில்லை. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் அப்பீல் கேட்கவில்லை. இதுகுறித்து போட்டியின் முடிவில் ஜோஸ் பட்லரிடன் கேட்ட போது, “நான் பந்தை பார்துக்கொண்டிருந்தேன்,

அங்கு என்ன நடந்தது என்று சரியாக கவனிக்கவில்லை. நாங்கள் இன்னும் சில நாட்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டியுள்ளது. அதனால் முதலிலேயே மனகசப்பு வேண்டாம் என அப்பீல் கேக்கவில்லை.

இதுவே உலக கோப்பை என்றால் நான் நிச்சயம் கேட்டிருப்பேன். போட்டிகளில் இதுவெல்லாம் சகஜம்” என்று கூறினார்.