எதிர் அணிகள் எங்களைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும் - கெத்து காட்டிய ஜோஸ் பட்லர்
எதிர் அணிகள் எங்களைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
இந்திய அணி பயணம்
டி-20 உலக கோப்பையில் பங்கேற்க செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஜோஸ் பட்லர்
இந்நிலையில், டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியைக் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் பேசுகையில், உலகக் கோப்பை டி20 தொடரில் எங்களை அபாயகரமான அணியாக கருதுகிறேன். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் அணிகள் எங்களைப் பார்த்து அச்சமடைய வேண்டும். எங்களது பேட்டிங் வரிசையைப் பார்த்தால் மேட்ச் வின்னர்கள் இருப்பது தெரியும் என்று கெத்தாக பேசியுள்ளார்.