விமான நிலையத்தில் வெயிட் பண்ற நேரத்தில் வரன் பாருங்க - வைரலாகும் புகைப்படம்!
சென்னை விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதிய விமான நிலையம்
சென்னை விமான நிலையம் சிறப்பாக இல்லை என்று பலரும் கூறி வந்த நிலையில், விமான நிலையம் மேம்படுத்தப்பட்டது. புதிதாக ஒருங்கிணைந்த முனையமும் கட்டப்பட்டது. இந்தியாவின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ஏர்போர்ட் வடிவமைக்கப்பட்டது.
இதனைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சில மாதங்களில் அனைத்து விமானங்களும் இந்த ஒருங்கிணைந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த சென்னை ஏர்போர்ட்டில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாட்ரிமொனி
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் 'எலைட் மேட்ரிமோனி' என்று ஒரு நிறுவனம் கடை வைத்துள்ளது. இதனை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன் ஒருவர், "சென்னை ஏர்போர்ட்டில் மருந்தகம் அல்லது அவசரமாகப் பொருட்களை வாங்கக் கடைகள் கூட இல்லை.. ஆனால், இங்கே பாருங்கள் என்ன இருக்கிறது என்று" என அவர் அங்குள்ள மேட்ரிமோனி கடையின் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
lol, MAA airport doesn’t have pharmacy/a convenience store in case of emergencies but look what I found ?? pic.twitter.com/QBhwbr3jsP
— A (@Aarsun) October 21, 2023
இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பலர் கலாய்த்து வருகின்றனர். அந்த பதிவில், ஒருவர், "வழக்கமாக விமான நிலையத்தில் ஒருவர் லே ஓவர் என்றாலும் கூட அதிகபட்சம் சில மணி நேரம் தான் இருக்க முடியும்.
அதற்குள் வாழ்க்கைத் துணையைத் தேடிவிடலாம் என்று யார் நம்புவார்கள் எனப் புரியவில்லை" என்று கூறி வருகின்றனர்.