மாமா நான் தான் - மாப்பிள்ளையும் நான் தான் - Matrimony'யில் 259 பெண்களுக்கு அல்வா கொடுத்தவர் கைது
ஆண் மாடல்களின் புகைப்படங்களை பதிவிட்டு 259 பெண்களை நூதனமாக ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் ஏமாற்றியுள்ளார்.
மேட்ரிமோனி
திருமணத்திற்கு ஆண் பெண் தேடுவபர்கள் பலரும் மேட்ரிமோனியில் தங்களது விவரங்களை அளித்து முயற்சிப்பர். இது பெரும்பாலும் ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர்களின் மூலமே பதவிடப்படுகிறது.
ஆனால், இந்த மேட்ரிமோனியை பயன்படுத்தி சிலர் நூதனமான முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி தான் ராஜஸ்தான் மாநிலத்தில் 45 வயதுடையவர் கைதாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மாமா - மாப்பிள்ளை
நரேஷ் புஜாரி என்ற 45 வயதான அவர், மேட்ரிமோனியில் ஆண் மாடல்களின் புகைப்படங்களை பதிவிட்டு செல் போனில் பேசும் போது, தானே மாப்பிள்ளையாக பேசி, நேரில் பெண் பார்க்க செல்லும் போது தானே மாப்பிள்ளையின் மாமாவாகும் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் தனது டார்கெட்டாக பெரும்பாலும் விவாகரத்தான பெண்களை தான் வைத்து மோசடி செய்துள்ளார். திருமண ஆசை வார்த்தை கூறி, பேசி அவர்களிடம் இருந்து பணம் பெற்ற பிறகு நம்பரை ஸ்விட்ச் ஃஆப் செய்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
இவர் இவருக்கு கிட்டத்தட்ட சுமார் 259 பெண்களிம் மோசடியில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.