சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ அணிகள் மோதும் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்..!
மழை குறுக்கிட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ அணி மோதும் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ரன் எடுக்க முடியாமல் திணறிய லக்னோ
16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 45வது சுற்று போட்டியின் இன்றைய மதிய நேர ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியும் விளையாடி வருகிறது.
இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் சம அளவிலான புள்ளிகளை பெற்றுள்ளன. இந்த சீசனில் இரு அணிகளும் 2வது முறை விளையாடுகிறது.
இன்றை போட்டி லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீசி வருகிறது.
இந்த நிலையில் போட்டியின் தொடக்கம் லக்னோ அணி வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறி வந்தன. இந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 33 பந்துகளில் 59 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆட்டம் தற்காலிக நிறுத்தம்
19.2 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்த நிலையில் மழை பெய்தால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை அணியில் மொயின் அலி,மகீஷ் தேக்ஷேனா,மதீஷ் பத்திரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா, ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.