திணறும் லக்னோ அணி - பந்து வீச்சில் மிரட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ்..!
16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 45வது சுற்று போட்டியின் இன்றைய மதிய நேர ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட அணியும் மோதுகிறது.
சென்னை - லக்னோ அணிகள் மோதல்
இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் சம அளவிலான புள்ளிகளை பெற்றுள்ளன. இந்த சீசனில் இரு அணிகளும் 2வது முறை மோதுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னை அணி.
இந்த நிலையில் இன்றை போட்டி லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீசி வருகிறது.
10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி.