விரைவாக தட்கல் டிக்கெட் புக் பண்ணனுமா? இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
டிக்கெட் பதிவு செய்யும் டெக்னீக் குறித்து பார்ப்போம்...
தட்கல் புக்
ஐஆர்சிடிசி மூலம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர். கடைசி நேரம் ஆகிவிட்டால், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் பொதுவாக தட்கல் சேவை மூலம் புக் செய்வேம்.

ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் முன்பதிவில் மாஸ்டர் லிஸ்ட் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்ற ஆப்ஷன் இருப்பதைப் பற்றி நாம் பெரிதாக தெரிந்திருக்க மாட்டோம். இதனை பயன்படுத்தி ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தட்கலை விட அதிகமாகும்.
ஈசி ட்ரிக்
முதலில் IRCTC இல் உள்ள உங்கள் கணக்கில் உள்நுழையவும், அதில் MY Master List என்பதைக் கிளிக் செய்யவும். முதன்மை பட்டியல் முன்பு உருவாக்கப்படவில்லை என்றால், எந்த பதிவும் காணப்படவில்லை என்று வரும். அதற்குப் பிறகு Add Passenger என்பதைக் கிளிக் செய்யவும்.
அதில் பயணம் மேற்கொள்ளப்போகும் பயணிகளின் விவரங்களைப் பூர்த்தி செய்து Add Passenger என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது பயணிகளின் விவரங்கள் சேமிக்கப்பட்டு விடும்.
பின்னர் தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 'எனது பயணிகள் பட்டியல்' என்பதற்குச் சென்று அதை நேரடியாக இணைத்தால் போதும்.
அதன்பின், upi செயலியில் முழு பயண டிக்கெட்டுக்கான பணம் இருந்தால் நொடிகளில் வேலை முடிந்து விடும்.