மக்களே உஷார் - பரவும் மர்ம காய்ச்சல்..? மீண்டும் கட்டாயமான முகக்கவசம்..!!
மழையின் காரணமாக மக்கள் பலரும், மர்ம காய்ச்சல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பரவும் காய்ச்சல்
தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து கோவையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த காரணத்தால் முககவசம் கட்டாயமாக்கப்பட்டது. அந்த மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.
புதுச்சேரியில் மரம் காய்ச்சல்
அதனை தொடர்ந்து தற்போது, புதுச்சேரி மாவட்டத்தில், மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் மருத்துவமனையில் இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக, புதுச்சேரியில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது மாநில சுகாதார துறை.