வேகமாக நிறையும் செம்பரம்பாக்கம்...மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
தொடர் மழை காரணமாக சென்னையின் நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகின்றது.
தொடரும் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போதும் குமரிக்கடல் பகுதியில் காற்று சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் சோமாலியா அருகே புயல் சின்னமும், குஜராத்தில் நிலபரப்பில் காற்று சுழற்சியும் நிலவுகிறது.
மேலும், இன்னும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய கூடும் என்றும் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தின் துவக்கத்தின் முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகின்றது. அதன் காரணமாக பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வருகின்றன.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
இந்நிலையில் தான் சென்னையின் நீராதாரணமான புழல், செம்பரம்பாக்கம் போன்ற நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றது. செம்பரம்பாக்க ஏரி 23 அடியை நெருங்கியிருக்கும் நிலையில், 200 கன அடி நீர் திறந்துவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
25 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 175 கன அடி நீர் திறந்துவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.