புதுசா கல்யாணம் முடிந்தவர்களா? அப்போ மாசி கருவாட மிஸ் பண்ணாதீங்க
மாசி கருவாடுகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்.
மாசி கருவாடு
பொதுவாக கருவாடுகளில் கால்சியம் அதிகம் என்பதால், எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.
பெண்களுக்கு நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளை சரிசெய்ய, கிராமப்புற மக்களுக்கு இன்றுவரை கைகொடுக்கிறது. குறிப்பாக மாசி கருவாடுகளில் சற்று கூடுதலான சத்துக்கள் நிறைந்துள்ளன.
பலன்கள்
இந்த கருவாடுகள் 2 ஆண்டுகளுக்கு கெட்டுப்போகாது. மாசி கருவாடுகளில் முட்களும் இருக்காது. ஆண்கள் இந்த மாசி கருவாடுகளை சாப்பிட்டு வரும்போது, விந்து திரவம் அதிகரிக்கும்.
குறைவான விந்தணுக்கள் இருந்தாலும், அதை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை இந்த கருவாடுகளுக்கு உண்டு. மேலும், வாத ஓட்டம், பித்த ஓட்டம், ரத்த ஓட்டமும் சீராகிவிடும். கருப்பை உதவி பெறும்.
மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், எலும்பு, நரம்பு, தசை, கொழுப்பு போன்றவற்றை பலப்படுத்தும்.