தலைமுடியை பீர் கொண்டு அலசுவதால் என்ன பலன் தெரியுமா? இப்படி செய்துப் பாருங்க!
பீர் கொண்டு அலசுவதால் தலைமுடிக்கு கிடைக்கு நன்மைகள் குறித்து பார்க்கலாம்
தலைமுடி
பீர் என்றால் ஒரு உற்சாக பானம் என்று பலருக்கு தெரியும். ஆனால் பீரை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? ஆம். ஆரோக்கியமாக முடி வளர்ச்சி,
அதிகரிக்கும் சில பொருட்கள் பீரில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உச்சந்தலையில் இது அளிக்கும் நன்மைகளின் அடிப்படையில் ஒரு இயற்கை தீர்வாகவும் பார்க்கப்டுகிறது.
ஊட்டச்சத்து
பீரில் பி6, பி12 மற்றும் ஃபோலிக் ஆசிட் போன்ற வைட்டமின்ஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இது முடி ஆரோக்கியமாக வளருவதற்கு உதவுமாம்.
முடியை பலப்படுத்தும்
பீரில் உள்ள புரதங்கள் குறிப்பாக மால்ட் மற்றும் ஹோப்ஸ் இழைகளை வலுப்படுத்துகிறது.
ஸ்கால்ப் ஆரோக்கியம்
ஸ்கால்ப் என்பது தலையில் முடி வளரும் சதை பகுதியாகும். எனினும் பீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் ஸ்கால்ப்-ஐ தூண்டி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பொடுகை குறைக்கும்
பீரில் இருக்கும் ஈஸ்ட் மற்றும் மால்ட் ஸ்கால்ப்பில் ஏற்படும் எரிச்சலை தணிக்கவும், பொடுகு தொல்லையை குறைக்கும்.
முடி சேதம்
பீர் ஒரு நேச்சுரல் கண்டிஷனராக இயங்கிறதாம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் முடியை சேதமடையாமல் இது பாதுகாக்கிறது.
ரத்த ஓட்டம்
ஸ்கால்ப்-ல் பீர் தேய்த்து குளிப்பதால், ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை வலுவாகவும், அதிகமாகவுமாக உதவுகிறது.
கூந்தல் அடர்த்தி
பீரில் இருக்கும் புரதங்கள் மற்றும் சர்க்கரைகள் கூந்தலுக்கு முழுமையான, அடர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது.