சீதாராம் யெச்சூரி காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்
உடல்நிலை காரணமாக சீதாராம் யெச்சூரி காலமானார்.
சீதாராம் யெச்சூரி மறைவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. 2015-ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருந்து வந்தார்.
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாகப் பதவியில் இருந்தார். சமீபத்தில் இவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
தலைவர்கள் இரங்கல்
தொடர்ந்து, நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் உடல்நிலை மோசமடையவே, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதனையடுத்து நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.