நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகல்..!
நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு குறிப்பிட்ட நபர்களே ஆதரவு தெரிவித்துள்ளதால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிப்பதில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருது அழகுராஜ் விலகல்

இதனிடையே நமது அம்மா நாளிதழ் செய்தி ஆசிரியர் மருது அழகுராஜ் விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
"நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். pic.twitter.com/Moy7mCVSg0
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) June 29, 2022