திருமணமான பெண்கள் Google-ல் அதிகம் தேடுவது? அந்த கேள்வியுமா கேட்பாங்க .. - ஷாக் தகவல்!
புதிதாக திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமாக தேடிய விஷயங்கள் குறித்த தகவல்.
புதுமணப் பெண்கள்
தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்துவது கூகுள் தான். எந்த கேள்விக்கும் விடை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் கூகுளை விட சிறந்தது எதுவுமில்லை.
நம்மில் பலரும் பல விதமான கேள்விகளை கூகுளில் தேடியிருப்போம். அந்த வகையில் புதிதாக திருமணமான பெண்கள் கூகுளில் அதிகமாக தேடிய விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். கூகுள் தரவுகளின்படி, தங்களது கணவர்களை பற்றித்தான் புதிதாக திருமணமான பெண்கள் அதிகமாக கூகிளில் தேடியுள்ளனர்.
கூகுள் தேடல்கள்
தனது கணவருக்கு எது மிகவும் பிடித்திருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?, கணவரின் இதயத்தை எப்படி கொள்ளை கொள்வது?, கணவரை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எப்படி? போன்ற கேள்விகளை பெண்கள் கூகுளிடம் எழுப்பியுள்ளனர்.
இதோடு நின்று விடவில்லை, புதிதாக திருமணமான பெண்களின் மனதில் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது. அதில், திருமணமாகி புதிய குடும்பத்திற்குள் நுழையும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்? குடும்பத்தில் ஒருவராக எவ்வாறு மாறுவது? போன்றவற்றையும் தேடியுள்ளனர்.
இதுமட்டுமா.. இல்லை.. இல்லை.. இதற்கும் ஒரு படி மேலே சென்று குழந்தை பெற்றுக் கொள்ள சரியான நேரம் எப்போது..? என்பதையும் புதிதாக திருமணமான பெண்கள் கூகுளிடம் கேட்டுள்ளனர். அவர்களின் இந்த தேடல்களை குறித்து அறிந்த ஆண்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.