மேகங்களுக்கு நடுவே பறக்கும் நட்சத்திர ஹோட்டல்; ஜிம் முதல் நீச்சல் குளம் வரை - ஆச்சரியம்!

World
By Jiyath Dec 10, 2023 05:08 AM GMT
Report

வானில் பறக்கும் நட்சத்திர ஹோட்டலின் மாதிரி கற்பனை வீடியோவை ஏமன் நாட்டை சேர்ந்த பொறியாளர் ஒருவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பறக்கும் ஹோட்டல் 

உலகில் தனித்துவமான பல ஆடம்பர ஹோட்டல்கள் உள்ளது. அதில் மலைகளின் மேல், கடலின் நடுவில், பனி பிரதேசங்களில் கட்டப்பட்டுள்ள சில ஹோட்டல்கள் நமக்கு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபங்களை கொடுக்கும்.

மேகங்களுக்கு நடுவே பறக்கும் நட்சத்திர ஹோட்டல்; ஜிம் முதல் நீச்சல் குளம் வரை - ஆச்சரியம்! | Five Star Hotel In The Sky Amidst Clouds

அதேபோன்று வானத்தில் மேகங்களுக்கு நடுவே ஒரு ஹோட்டல் கட்டப்பட்டால் எப்படி இருக்கும். அதில் ஜிம் முதல் நீச்சல் குளம் போன்ற அனைத்து வசதிகள் இருந்தால் எப்படி இருக்கும். அந்த வகையில் ஸ்கை க்ரூஸ் எனப்படும் வானில் பறக்கும் நட்சத்திர ஹோட்டலின் மாதிரி கற்பனை வீடியோவை ஏமன் நாட்டை சேர்ந்த பொறியாளர் ஹஷேம் அல்-கைலி என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விவரிக்கையில் "இது ஒரு பெரிய அணுசக்தியால் இயங்கும் ‘பறக்கும் ஹோட்டல்’. வானத்தில் பறந்து கொண்டே இருக்கும் இந்த ஹோட்டலில் ஒரே நேரத்தில் 5,000 பயணிகள் தங்க முடியும்.

தொண்டையில் சிக்கிய இறைச்சி; எடுக்க முயன்று டூத் பிரஷை விழுங்கிய பெண் - அடுத்து நடந்தது..?

தொண்டையில் சிக்கிய இறைச்சி; எடுக்க முயன்று டூத் பிரஷை விழுங்கிய பெண் - அடுத்து நடந்தது..?

ஆடம்பர வசதிகள் 

உடற்பயிற்சி கூடம் முதல் நீச்சல் குளம் வரை அனைத்து வசதிகளும் இதில் இருக்கும். காற்றில் பறக்கும் மேகங்களுக்கு மத்தியில் இருப்பது யாரையும் சிலிர்க்க வைக்கும். ஆடம்பரத்தின் சின்னமாக பார்க்கப்படும் இந்த பறக்கும் ஹோட்டலின் உள்ளே இருந்து பார்த்தால் 5 நட்சத்திர ஹோட்டல் போல தோன்றும்.

மேகங்களுக்கு நடுவே பறக்கும் நட்சத்திர ஹோட்டல்; ஜிம் முதல் நீச்சல் குளம் வரை - ஆச்சரியம்! | Five Star Hotel In The Sky Amidst Clouds

இதில் வணிக வளாகம், பார், உணவகம், விளையாட்டு வளாகம், சினிமா அரங்கம் ஆகியவற்றுடன், குழந்தைகள் விளையாடும் மைதானமும் கட்டப்பட்டுள்ளது. மேலும், உள்ளே ஒரு மாநாட்டு மையமும் இருக்கும். அங்கு எந்தவிதமான நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யலாம். ஆனால் இந்த பறக்கும் ஹோட்டலின் மிக முக்கியமான விஷயம் என்பது, இந்த ஸ்கை க்ரூஸ் முற்றிலும் அணுசக்தியால் இயக்கப்படுகிறது.

அதில் விமானம் போல் எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமே இருக்காது. அணு எரிபொருளாக இருப்பதால், எப்போதும் காற்றில் பறந்து கொண்டே இருக்கும். வானிலேயே அதன் பராமரிப்பு மற்றும் பழுது செய்யப்படும். இந்த வீடியோ இப்போது பலரையும் கவர்ந்துள்ளது.