அடடே... இனி கல்யாணமாகி குழந்தை பெற்ற பிறகும் மிஸ் யூனிவெர்ஸ் ஆகலாமா?

United States of America
By Sumathi Aug 22, 2022 01:33 PM GMT
Report

பிரபஞ்ச அழகி போட்டியில் இனி திருமணமான பெண்கள், கர்ப்பிணிகள், தாயார்களும் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மிஸ் யூனிவெர்ஸ் 

மிஸ் வேர்ல்ட், மிஸ் இன்டர்நேஷனல் மற்றும் மிஸ் எர்த் ஆகியவற்றுடன், மிஸ் யுனிவர்ஸும் மிகப்பெரிய நான்கு சர்வதேச அழகுப் போட்டிகளில் ஒன்றாகும். உலகில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான மிஸ் யுனிவர்ஸ்,

அடடே... இனி கல்யாணமாகி குழந்தை பெற்ற பிறகும் மிஸ் யூனிவெர்ஸ் ஆகலாமா? | Married Women In Miss Universe Pageant From 2023

பெண்ணிய இயக்கத்தின் ஒரு பகுதியாக தற்போது மாறிவிட்டது. பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொள்ள 28 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். திருமணம் செய்திருக்கக்கூடாது,

புதிய அறிவிப்பு

குழந்தை பெற்றிருக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருந்து வந்தன. இந்த நிலையில் இனி பிரபஞ்ச அழகி போட்டியில் திருமணமானவர்களும் அம்மாக்களும் கலந்து கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அடடே... இனி கல்யாணமாகி குழந்தை பெற்ற பிறகும் மிஸ் யூனிவெர்ஸ் ஆகலாமா? | Married Women In Miss Universe Pageant From 2023

ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவு அவரது வெற்றிக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதை கருதி, இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக போட்டி நடத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இந்த அறிவிப்பை பலரும் ஏகபோகமாக வரவேற்றனர்.