தன்னைவிட 15வயது சிறியவரான காதலனை கழட்டிவிட்டார் சுஷ்மிதா சென் - வெளியான அறிவிப்பு
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஷ்மிதா சென். இவர் தமிழில் நாகர்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்துள்ளார்.
மேலும், ‘முதல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘சக்கலக்கா பேபி’ பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினார். ஐதராபாத்தில் பிறந்த இவர், இந்தியாவின் சார்பில் முதன்முதலாகப் ‘பிரபஞ்ச அழகி’ பட்டத்தை வென்றவர். 45 வயதாகும் இவர், இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இருந்தாலும், ரெனி, அலிசா என 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரோமன் ஷால் என்கிற இளைஞன் மீது காதலில் விழுந்தார் சுஷ்மிதா சென், அவருடன் கடந்த 3 ஆண்டுகளாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
இருவருக்கும் இடையே 15 வயது வித்தியாசம். ஆனால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில், தற்போது அவர்கள் பிரிவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் இருவரும் நண்பர்களாக அறிமுகமானோம். நண்பர்களாகவே இருந்தோம்! எங்களது உறவு முறிந்து ரொம்ப நாளாச்சு... இருப்பினும் அன்பு அப்படியே தான் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.