திருமணமான பெண்ணுடன் ஆசைகாட்டி பாலியல் உறவு வைக்கலாமா? உயர்நீதிமன்றம் சொன்னதென்ன!

Sexual harassment Marriage Madhya Pradesh
By Sumathi Feb 26, 2025 04:34 AM GMT
Report

திருமணமான பெண்ணின் தகாத உறவு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தகாத உறவு

மத்தியப் பிரதேசம், சதர்பூரைச் சேர்ந்தவர் வீரேந்திர யாதவ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழகி வந்துள்ளார். எனவே, அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

திருமணமான பெண்ணுடன் ஆசைகாட்டி பாலியல் உறவு வைக்கலாமா? உயர்நீதிமன்றம் சொன்னதென்ன! | Married Woman Affair False Promise Mp High Court

இந்நிலையில் அந்த பெண் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "தன்னுடைய கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீரேந்திரா அடிக்கடி வீட்டிற்கு வருவார். அப்போது நாங்கள் இருவரும் உறவு வைத்துக்கொள்வோம். வீரேந்திராவுக்கும் திருமணமாகிவிட்டது.

ஆனாலும் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். கடைசியில் திருமணம் செய்யாமல் என்னை ஏமாற்றிவிட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் வீரேந்திரா மீது போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர்.

கண்டித்த குடும்பம் - கள்ளக்காதலுக்காக தீக்குளித்து பெண் தற்கொலை!

கண்டித்த குடும்பம் - கள்ளக்காதலுக்காக தீக்குளித்து பெண் தற்கொலை!

நீதிமன்ற தீர்ப்பு

இதனையடுத்து அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, "புகார் கொடுத்திருக்கும் பெண்ணே மனுதாரரான வீரேந்திராவுடன் 3 மாதங்களாக உறவிலிருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். என் கணவர் இல்லாத போதெல்லாம் இளைஞர் என்னுடைய வீட்டிற்கு வருவார் என்றும் கூறியிருக்கிறார்.

madhya pradesh high court

புகார்தாரர் வற்புறுத்தப்பட்டதாகவோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ எந்தக் குற்றச்சாட்டும் கூறவில்லை. அதோடு அந்த பெண் பொய்யான வாக்குறுதியின் அடிப்படையில் உறவு வைத்துக்கொண்டதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை" என்று கூறி வழக்கை ரத்து செய்ய நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து இளைனர் விடுவிக்கப்பட்டுள்ளார்.