மகளின் திருமணத்தில் மாரடைப்பில் சரிந்த தந்தை - கதறிய குடும்பம்!
மகளின் திருமணம் முடிந்ததும் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகள் திருமணம்
தெலுங்கானா, ராமேஷ்வர்பள்ளி கிராமத்தில் வசித்தவர் பாலசந்திரம்(56). இவரது மூத்த மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, பிக்கனரில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கன்னியாதானம் சடங்கின்போது அவர் தனது மகளின் கால்களைக் கழுவினார். அதன்பின் சில நிமிடங்களில் திடீரென மாரடைப்பால் சரிந்தார்.
தந்தை உயிரிழப்பு
உடனே குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தம்பதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீதி திருமண சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.