நடிகை அஞ்சலிக்கு கல்யாணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

Anjali Tamil Cinema Gossip Today Marriage
By Sumathi 2 வாரங்கள் முன்
Report

நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஞ்சலி

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. அஞ்சலியின் நடிப்பை பலரும் பாராட்டினர்.

நடிகை அஞ்சலிக்கு கல்யாணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா? | Married To Actress Anjali Viral

தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார். தொடர்ந்து நடிகர் ஜெய்யுடன் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். அதன்பின் அவருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார்.

திருமணம்?

ஆனால் அதற்கு அஞ்சலி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவரது பெற்றோர் தொழிலதிபர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள அஞ்சலியும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகை அஞ்சலிக்கு கல்யாணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா? | Married To Actress Anjali Viral

தற்போது ராம்சரணுடன் ஷங்கர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் திருமணம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.