இனி திருமணமானவர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற.. இது கட்டாயம்!
திருமணமானவர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரீன் கார்டு
அமெரிக்காவில் திருமணமானவர்கள் கிரீன் கார்டு பெறுவதற்கான விசா நடைமுறைகளில் புதிய மற்றும் கடுமையான விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, தம்பதியினர் தங்கள் உறவு உண்மையானது என்பதை நிரூபிக்க, வங்கிக் கணக்குகள், புகைப்படங்கள் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதும், நேரில் சந்தித்து நேர்காணல் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய விதி
இந்த புதிய விதிகள், நிலுவையில் உள்ள மற்றும் புதியதாக தாக்கல் செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் பொருந்தும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் தெரிவித்துள்ளது. தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் கூடிய மற்ற நாட்டு மக்களை கண்டறிந்து,
அவர்களை அமெரிக்காவிலிருந்து அகற்றுவதற்குச் செயல்படுத்துவதன் மூலம் அமெரிக்கர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று USCIS ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் இது ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் அல்லது அரசாங்கப் பணிகளுக்காக வெளிநாட்டில் நிறுத்தப்பட்டுள்ளவர்கள் உட்பட"இந்த வழிகாட்டுதல் தகுதிவாய்ந்த திருமணங்கள் மற்றும் குடும்ப உறவுகளை சரிபார்க்கும் திறனை மேம்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.