மனைவி இருக்கும் போது லிவ் இன் உறவுக்கு உரிமை? உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு!

Uttar Pradesh Relationship
By Sumathi May 09, 2024 08:30 AM GMT
Report

லிவ் இன் ரிலேஷன்ஷிப் குறித்த முக்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

லிவ் இன் ரிலேஷன்ஷிப்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் முகமது சதாப்கான். இவர் சினேகா தேவி என்பவரை காதலித்து வந்துள்ளார். மேலும், ருவரும் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.

மனைவி இருக்கும் போது லிவ் இன் உறவுக்கு உரிமை? உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு! | Married Muslim Cannot Claim Rights In A Live In

இதையறிந்த பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை மீட்டுத் தரக் கோரி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். தொடர்ந்து, இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் எனவும், தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக முடிவு செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உண்டு எனவும் கூறி தம்பதிகள் இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிதான் ஹீரோயின்.? லிவ் இன் ரிலேஷன்ஷிப் - மனம் திறந்த வாணி போஜன்!

அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிதான் ஹீரோயின்.? லிவ் இன் ரிலேஷன்ஷிப் - மனம் திறந்த வாணி போஜன்!


நீதிமன்ற தீர்ப்பு

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.ஆர்.மசூதி மற்றும் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முகமது சதாப்கானுக்கு ஏற்கனவே பரிதா கட்டூன் என்பவருடன் திருமணம் நடைபெற்று, அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது தெரிவிக்கப்பட்டது.

மனைவி இருக்கும் போது லிவ் இன் உறவுக்கு உரிமை? உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு! | Married Muslim Cannot Claim Rights In A Live In

அதன்பின் பேசிய நீதிபதிகள், ”இஸ்லாமியர் ஒருவர் திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் வாழ்ந்து வரும் போது, வேறொரு பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க இஸ்லாம் மதத்தின் கீழ் அனுமதி இல்லை.

விவாகரத்து பெற்ற பின்னர் வேறு ஒருவருடன் இணைந்து வாழ்வது தவறில்லை” எனக் கூறி சினேகா தேவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டனர்.