லிவ் இன் உறவை பதிவு செய்யாவிட்டால் இனி ஜெயில் - பொது சிவில் சட்டம்!
லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்தான சட்டங்கள் விவாதங்களை கிளப்பியுள்ளது.
லிவ்-இன் உறவு
உத்தரகாண்ட், சட்டசபையில் திருமணம், விவாகரத்து, சொத்து மற்றும் வாரிசு சட்டங்கள் தொடர்பான பொது சிவில் சட்டம் செய்யப்பட்டது. இந்த புதிய பொது சிவில் சட்டப்படி, லிவ்-இன் உறவில் இருப்போர் இதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விதிகளை கடைப்பிடிக்கத் தவறுவோருக்கு 6 மாத சிறை தண்டனையும், தவறான தகவல் வழங்குவோருக்கு 3 மாத சிறையும் மற்றும் 25,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். 21 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் லிவ்-இன் உறவில் இருக்கப் பெற்றோர் ஒப்புதல் தேவை.
பொது சிவில் சட்டம்
மேலும், அவர்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவர்களா இல்லையா என்பதை அறிக்கையாகப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். லிவ் இன் உறவில் வந்து ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். இப்படி ஒரு மாதத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றால் அவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து விலகிய பெண் நீதிமன்றத்தை அணுகலாம். பராமரிப்பு தொகை குறித்து கோரிக்கை விடுக்கவும் உரிமை இருக்கிறது. அந்த உறவில் பிறக்கும் குழந்தைகள் இந்த புதிய விதிகளின்படி அந்த தம்பதியரின் முறையான குழந்தையாக அறிவிக்கப்படும்.
ரத்த உறவுகள், ஏற்கணவே திருமணமானவர், மைனர் போன்றோர் பதிவு செய்ய முடியாது. பார்ட்னர்களில் ஒருவரை மிரட்டி சம்மதம் வாங்கி இருந்தாலும் பதிவு செய்ய இயலாது.
அதேபோல், அந்த உறவை முடித்துக் கொள்ள விரும்பினால், இருவரும் அல்லது இருவரில் ஒருவர் இது தொடர்பாகப் பதிவாளரிடம் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.