8 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பலே கில்லாடி காதல் மன்னன் - ஆந்திராவில் பரபரப்பு

Married
By Nandhini Jul 14, 2022 08:05 AM GMT
Report

8 பெண்களை திருமணம்

குண்டூரைச் சேர்ந்தவர் சிவ சங்கர் பாபு. இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி மேட்ரிமோனியில் பதிவிட்டிருக்கிறார். இதை நம்பி இவரை திருமணம் செய்ய பெண்கள் முன்வந்தனர்.

சிவசங்கர் பாபு இதுவரை 8 பெண்களை திருமணம் செய்துகொண்டு சில மாதங்களில் வாழ்ந்து, அவர்களிடமிருந்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். இந்நிலையில், அந்த 8 பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர். இந்த 8 பெண்களும், சிவ சங்கர் பாபுவை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

married 8 women

வழக்குப்பதிவு

ஏமாற்றமடைந்த இந்த 8 பெண்களும், சிவசங்கர் பாபு மீது குகட்பல்லி, ஆர்.சி.புரம், பாலாநகர், ராய்துர்கம் சைபராபாத் போலீஸ் நிலையங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அனந்தபூர் போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுத்தனர். இவர்கள் கொடுத்த புகாரை போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணம் பறித்து மோசடி செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.