living together.. யூஸ் பன்னிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் - நீதிமன்றம் வேதனை!

Kerala Marriage Relationship
By Sumathi Sep 01, 2022 11:51 AM GMT
Report

லிவிங் டுகெதர் வாழ்க்கையால் திருமண உறவுகள் உடைவதாக கேரள உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

லிவிங் டுகெதர் 

தற்போது லிவிங் டுகெதர் நடைமுறை அதிகரித்து வருகிறது. இந்த நடைமுறை சாதகமாக அமையுமா? பாதகமாக அமையுமா? என்றால் கேள்விக்குறிதான்.

living together.. யூஸ் பன்னிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் - நீதிமன்றம் வேதனை! | Marriages Affected By Living Together High Court

இந்நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவாகரத்து கேட்டு கேரள நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் முகமது முஸ்தாக் மற்றும் சோபி தாமஸ் அகர்வால் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

உடையும் திருமண பந்தம் 

அப்போது விவாரகத்து கேட்டு இளைஞர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிபதிகள், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் திருமணங்களை பாதித்துள்ளதாக தெரிவித்தனர். எப்போது வேண்டுமானாலும் பிரிந்துசெல்லக்கூடிய லிவிங் டுகெதர் உறவுமுறை அதிகரித்து வருவதாகவும்,

living together.. யூஸ் பன்னிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் - நீதிமன்றம் வேதனை! | Marriages Affected By Living Together High Court

புதிய தலைமுறையினர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு திருமணத்தை தடையாக பார்க்கின்றனர். மேலும், விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் அதிகரிப்பு சமூகத்தை பாதிக்கும் என்ற நீதிபதிகள்,

கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் கேரளா, ஒருகாலத்தில் வலுவான குடும்ப உறவுகளை கொண்டிருந்ததாகவும், பலவீனம் மற்றும் சுயநலம் போன்றவற்றால் திருமண உறவுகள் உடைவதாகவும் வேதனை தெரிவித்தனர்.