ஸ்வீட் எங்கடா... சாப்பாட்டில் இனிப்பு இல்லாததால் நின்றுபோன திருமணம்!

Karnataka Marriage
By Swetha May 07, 2024 04:11 AM GMT
Report

திருமணவிழா விருந்தில் முதலில் இனிப்பு இடம் பெறாததால் திருமணம் நின்றுபோனது.

இனிப்பு

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் படாவனே பகுதியில் வசித்து வருபவர் 23 வயதுடைய இளம்பெண். இவருக்கும், துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று நடந்தது. மணமக்கள் மேடையில் இருந்தபோது, திடீரென தகராறு ஏற்பட்டது.

ஸ்வீட் எங்கடா... சாப்பாட்டில் இனிப்பு இல்லாததால் நின்றுபோன திருமணம்! | Marriage That Stopped Because There Was No Sweet

அதாவது சம்பிரதாயப்படி முதலில் சாப்பாடு இலையில் இனிப்பு வைப்பது வழக்கம். ஆனால், ஸ்வீட் வைக்காமல் விட்டதாகவும் இதனால் சம்பிரதாயம் அவமதிக்கப்பட்டதாகவும் கூறி மணமகன் வீட்டார் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த பெண் வீட்டாரும், பதிலுக்கு சண்டையில் ஈடுபட்டனர்.

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகை த்ரிஷா திருமணம் - காரணம் என்ன?

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகை த்ரிஷா திருமணம் - காரணம் என்ன?

திருமணம்

இதனால் வாக்குவாதம் முட்டி கலவரம் முற்றியது. மணமகன் வீட்டார் இந்த திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டனர். பிறகு பெண் வீட்டார் இறங்கி வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். விடிய விடிய நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு வழியாக தாலி கட்ட சம்மந்தம் தெரிவித்தனர். அதுவரை பொறுமையாக இருந்த மணமகள் திடீரென கொந்தளித்து,

ஸ்வீட் எங்கடா... சாப்பாட்டில் இனிப்பு இல்லாததால் நின்றுபோன திருமணம்! | Marriage That Stopped Because There Was No Sweet

திருமன்னத்திற்கு முன்பே சின்ன விஷயத்துக்கு இவ்வளவு பிரச்சனை என்றால் தாலி கட்டிய பிறகு நிம்மதியாக இருக்க முடியாது என்று கூறி திருமணத்தை நிறுத்தினார். பெற்றோர்களும் உறவினர்களும் எவ்வளவு சமாதானப்படுத்த முயற்சித்தும் அவர் மனம் இறங்கவில்லை. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் புகார் அளித்தார்.

மேலும், திருமணத்துக்கு அதிகம் செலவு செய்ததாகவும் அதனால் நஷ்டம் அடைந்திருப்பதால், அந்த செலவுகளை மணமகன் வீட்டார் தர வேண்டும் என்றும் மணப்பெண் கூறினார். இருதரப்பினரிடமும் விசாரணை நடத்திய போலீசார், மணப்பெண் கேட்டபடி திருமண ஏற்பாடுக்கான செலவுகளை மணமகன் வீட்டாரிடம் இருந்து பெற்றுக் கொடுத்தனர்.