பிரதமர் பெயர் தெரியாத மாப்பிள்ளை - அதிர்ச்சியில் தம்பியை திருமணம் செய்த மணப்பெண்!

Uttar Pradesh Marriage
By Sumathi Jun 24, 2023 08:05 AM GMT
Report

மணமகனுக்கு பிரதமர் பெயர் தெரியாததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

பிரதமர் பெயர்

உத்தரப் பிரதேசம், நசிர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன் சிவசங்கர்(27). இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த ரஞ்சனா என்ற இளம்பெண்ணுக்கும் 6 மாதத்திற்கு முன் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

பிரதமர் பெயர் தெரியாத மாப்பிள்ளை - அதிர்ச்சியில் தம்பியை திருமணம் செய்த மணப்பெண்! | Up Marriage Stopped For Prime Minister Name

தொடர்ந்து, திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் ஊர்வலமாக மணமகள் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் அங்கு பிரபலமான கிச்சடி நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது, மணமகளும், அவரது சகோதரர்களும் சில கேள்விகளை மணமகனிடம் கேட்டுள்ளனர்.

மணமகள் அதிர்ச்சி

அதில், நாட்டின் பிரதமர் யார் என்ற கேள்வி கேட்டதில் அவருக்கு பதில் தெரியவில்லை. இதனை பார்த்த நண்பர்கள் கிண்டலடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், இப்படி முட்டாளான நபரை வருங்கால கணவராக ஏற்க முடியாது என திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

மேலும், சிவசங்கரின் இளைய சகோதரரான ஆனந்தை பெண் வீட்டார் ரஞ்சனாவுக்கு அன்றை தினமே திருமணம் செய்து வைத்துள்ளனர். அதனயடுத்து இதனால் கோபமடைந்த மணமகனின் தந்தை தனது இளைய மகன் திருமண மிகவும் சிறியவன், திருமணத்திற்கான வயதை எட்டாதவர். அவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவிட்டதாக என புகார் தெரிவித்துள்ளார்.