உடல் தேவைக்கு மட்டுமல்ல திருமணம் - உயர்நீதிமன்றம் அதிரடி!
திருமணம் என்பது உடல் தேவைக்கானது மட்டுமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருமணம்
பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தனக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும் 2021ஆம் ஆண்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் அவருடைய இரண்டு குழந்தைகளும் தந்தையின் பாதுகாப்பில் அவருடைய வீட்டில் வசித்து வருதாக கூறியிருந்தார். அந்த இரண்டு குழந்தைகளையும் தந்தையிடம் இருந்து தனக்கு பெற்று தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
வழக்கு
அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “இருநபர்கள் திருமணம் செய்யும் போது அவர்கள் இருவரும் தங்களுடைய உடல் தேவைகளுக்காக திருமணம் செய்து கொள்வதில்லை.
அவர்கள் அடுத்த சந்ததியினரை உருவாக்க இனபெருக்கம் செய்ய தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் தாய், தந்தை ஆகிய இருவரின் பந்ததிற்கு உரியவர்கள்.
நீதிமன்ற தீர்ப்பு
இப்படி நடைபெற்ற திருமணத்திலிருந்து பிரியும் நபர்களால் இந்தப் பந்தம் உடைக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் இருவரையும் தாயின் கட்டுப்பாட்டில் இருக்க உத்தரவிட்டார்.
அத்துடன் அந்த குழந்தைகள் தன்னுடைய தாயின் பெற்றோர்களுடன் வழக்கம் போல் இருந்து பள்ளிக்கு செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.