பிரான்ஸ் மாப்பிள்ளைகள்.. மண் மனம் மாறாத தமிழ் முறை திருமணம் - சுவாரஸ்ய சம்பவம்!

Tamil nadu France Marriage
By Sumathi Aug 15, 2022 12:15 PM GMT
Report

பிரான்ஸில் வளர்ந்த மூன்று மணப்பெண்கள், அந்நாட்டை சேர்ந்தவர்களையே தமிழ் முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.

பிரான்ஸ் மாப்பிள்ளைகள்

திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் மாசிலாமணி, ஆனந்தி தம்பதியினர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்ஸில் வாழ்ந்து வருகின்றனர். மாசிலாமணி பிரான்சில் தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

பிரான்ஸ் மாப்பிள்ளைகள்.. மண் மனம் மாறாத தமிழ் முறை திருமணம் - சுவாரஸ்ய சம்பவம்! | France Grooms Wedding In Tamilnadu

இந்த தம்பதியினருக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயிணி என மூன்று மகள்கள் உள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மூவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர்.

தமிழ் முறை திருமணம்

அவர்களது பெற்றோர் அவர்களுக்கு தமிழ் கலாசார முறைப்படி திருமணம் முடித்து வைக்க விரும்பினர். அதனைத்தொடர்ந்து நேற்று பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களின் மூன்று மகள்களுக்கும் ஒரே நேரத்தில்

பிரான்ஸ் மாப்பிள்ளைகள்.. மண் மனம் மாறாத தமிழ் முறை திருமணம் - சுவாரஸ்ய சம்பவம்! | France Grooms Wedding In Tamilnadu

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ், ராம்குமார், மஜ்ஜூ என்ற மூவருடன் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.இந்த திருமணத்தை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இரு நாட்டு கலாசாரம்

வெளிநாட்டில் பிறந்து அங்குள்ள கலாசாரத்தில் வளர்ந்து இருந்தாலும் தமிழ் கலாசாரத்தை மதிக்கும் விதமாக தங்கள் 3 பிள்ளைகளுமே வாழையடி வாழையாக வாழ வேண்டும் என விரும்பி தமிழர் கலாசாரத்தில் திருமணம் செய்து வைத்ததாக தாய் ஆனந்தி தெரிவித்தார்.

தமிழர் பாரம்பரியத்தை மதிப்பதால் தமிழகத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்த மணமகள் காயத்ரி இந்த திருமணத்தால் இரு நாட்டு கலாசாரமும் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார்.

அன்பு தான் ஆதாரம்

தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு மணமகன் மஜ்ஜூ இதுகுறித்து பேசுகையில், தங்கள் நாட்டில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வதை விட தமிழ் கலாசார முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டது தனக்கு ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தாங்கள் சூடியுள்ள மண மாலையின் பூக்களுக்கு உயிர் இருப்பதாக உணர்வதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர், "உறவினர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டது ஒரு மதிப்புமிக்க நிகழ்வாக உள்ளது. இந்த திருமணத்தால் கலாசாரங்கள் ஒன்றிணைகிறது. அன்பு மட்டும் தான் அனைத்துக்கும் ஆதாரம்" என தெரிவித்தார்.