தங்கைக்கு திருமணம்.. வீட்டுவாசலில் அக்காவுக்கு நடந்த சம்பவம் - கதறிய உறவினர்கள்!
தங்கையின் திருமண நாளன்று சகோதரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜெகன்பால் - பிரபா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரபாவின் தங்கைக்கு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதனால் அதிகாலையில் மணப்பெண் அழைப்புக்கு முன் வீட்டு வாசலை சுத்தம் செய்ய பிரபா சென்றார். பின்னர் வீட்டு முன் இருந்த குப்பைகளை அகற்றி கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிரிழப்பு
ஆனால், பிரபாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். மேலும், அவரது தங்கையின் திருமணமும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் வீட்டுக்கு முன்பு போடப்பட்டிருந்த சீரியல் விளக்குகளிலிருந்து மின்சாரம் பாய்ந்து பிரபா உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. ஆனால், பிரேத பரிசோதனைக்கு பிறகே என்ன நடந்தது என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.