நைஜீரியா மார்க்கெட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 6 பலி

shop war human
By Jon Feb 05, 2021 02:47 AM GMT
Report

நைஜீரியா நாட்டில் உள்ள மார்க்கெட் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயால் அந்த பகுதியில் இருந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் குவாரிம்பா மாவட்டத்தில் உள்ள அபுஜா டிப்பர் மார்கெட்டில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியானார்கள்.

விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அங்குள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீப்பொறியே இந்த விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பாக சுமார் 2 மணி நேரம் கொளுந்துவிட்டு எரிந்த தீயால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது.