மனைவிக்கு 18 வயதுக்கு மேல் இருந்தால், பாலியல் வன்கொடுமை குற்றமில்லை - உயர்நீதிமன்றம்
மனைவி 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், திருமண பாலியல் வன்கொடுமை குற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
உத்தரப்பிரதேசம், 2012ல் பெண் ஒருவர் தனது கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்போது, கணவர் செய்த கொடுமையால் திருமண வாழ்க்கை சிதைந்துவிட்டது.
தன்னை வாய்மொழியாக உடல் ரீதியான வன்முறைக்கு உட்படுத்தினார். இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதால், தனது அந்தரங்க உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.
நீதிமன்றம் தீர்ப்பு
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நிலையில், குடும்ப நீதிமன்றம் அந்த கணவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து அந்த நபர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு,
இந்த நாட்டில் திருமண பலாத்காரம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. திருமண பலாத்காரத்தை குற்றமாக்கக் கோரும் மனுக்கள் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால்,
மனைவிக்கு 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் போது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை திருமண பலாத்காரத்திற்கு குற்றவியல் தண்டனை இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.